Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

குறையப்போகும் 137 கேன்சர் மருந்துகள் விலை - NPPA நடவடிக்கை!

குறையப்போகும் 137 கேன்சர் மருந்துகள் விலை - NPPA நடவடிக்கை!

மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டு ஆணையின்கீழ், வர்த்தக லாப வரம்பைச் சீரமைக்கும் இந்த நடவடிக்கைக்கான அரசிதழ் அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

137 புற்றுநோய் மருந்துத் தயாரிப்புகளின் வர்த்தக லாப வரம்பை 30 சதவீதமாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) நிர்ணயித்துள்ளது. 

நவம்பர் 9 முதல் அமலாகும் இந்த நடவடிக்கையால், தற்போதைய விலைக் கட்டமைப்பைப் பொறுத்து சில்லறை விலை 70 சதவீதம் வரை குறையும் என மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டு ஆணையின்கீழ், வர்த்தக லாப வரம்பைச் சீரமைக்கும் இந்த நடவடிக்கைக்கான அரசிதழ் அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்தின்கீழ் அமைக்கப்பட்ட, புற்றுநோய் மருத்துவர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவின் பரிந்துரைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மருந்துகளின் பட்டியல் அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.

கடந்த 2019-ல் 42 புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக லாப வரம்பு 30 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் 526 வணிகப் பெயர்களில் விற்கப்பட்ட மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 90 சதவீதம் வரை குறைந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருந்து நிறுவனங்கள் திருத்தப்பட்ட விலைப்பட்டியலைத் தங்களது இணையதளங்களில் வெளியிட்டு, சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

நவம்பர் 9 முதல் குறைக்கப்பட்ட விலையையே வசூலிப்பதுடன், மருந்தகங்களில் புதிய விலைப்பட்டியலை காட்சிப்படுத்த வேண்டும். மருத்துவமனைகள் தங்களது இணையதளங்களிலும் புதிய விலைகளை வெளியிட வேண்டும்.

நுகர்வோர் என்பிபிஏ இணையதளம் மற்றும் ‘பார்மா சஹி தாம்’ செயலியில் விலைகளைச் சரிபார்க்கலாம். விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விநியோகத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், தற்போதைய உற்பத்தி மற்றும் விநியோக அளவைத் தொடர்ந்து பராமரிக்கவும் மருந்து நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

விநியோகம் மற்றும் சில்லறை விற்பனையில் அதிகப்படியான லாபத்தைக் கட்டுப்படுத்துவதே நோக்கம் என்றும், உற்பத்தியாளர்களின் நியாயமான வருவாயைப் பாதிக்காமல் நோயாளிகளுக்கு மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
சேலத்தில் ஆப்பிள் விலை சரிவு
அடுத்த செய்தி
45 பில்லியன் டாலரை எட்டும் இந்திய விண்வெளிப் பொருளாதாரம்

தொடர்புடைய செய்திகள்